இது சிரிப்பதற்கான நேரம்!!  நோயாளி : சொத்துபத்து எக்கச்சக்கமா இருந்தும் என்ன பண்றது டாக்டர்..? கிட்னியிலே கல்லு இருக்கே? டாக்டர் : கவலைப்படாதீங்க.. எல்லாத்தையும் கரைச்சுடுவோம்! நோயாளி : 😮😮 கணவன் : என்ன விமலா திடீர்னு நீயே சமையல் பண்றேங்கற? மனைவி : உங்க சமையல் கை பக்குவத்தை பார்த்தாங்கன்னா விருந்தாளிங்க இரண்டு நாள் கூட இருந்திடுவாங்க அதான்.. கணவன் : 😉😉 தெரிந்து கொள்ளுங்கள்..!! 🕯 ஒரு மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருக்கிறது. அதை ஊதி அணைத்துவிட்டு உடனே மறுபடியும் தீக்குச்சி கொண்டு பொருத்தினால் உடனே பற்றிக் கொள்கிறது. ஆனால் புதிதாக ஒரு மெழுகுவர்த்தியைப் பற்ற வைக்க சிறிது நேரமாகிறது. ஏன்?  🕯 எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தியை அணைத்தாலும் அதைச் சுற்றி மெழுகு ஆவி சுற்றியிருக்கும். தீப்பொறியைக் கண்டவுடன் மெழுகுவர்த்தி உடனே பற்றிக் கொள்ள அது பயன்படுகிறது. 👔 துணியை அயர்ன் செய்யும்போது தண்ணீர் தெளித்து பின் சூடான பாக்ஸை வைத்து தேய்க்கும்போது மட்டும் ஒழுங்காகத் தேய்க்க வருகிறது. ஏன்?  👔 துணியில் உள்ள ஸ்டார்ச் தண்ணீர் பட்டவுடன் நன்கு பரவி துணிக்கு மிருதுத் தன்மை கொடுக்கிறது. சூடான பாக்ஸை வைத்து தேய்க்கும்போது தண்ணீர் ஆவியாகி ளவகைக யனெ ளரசகயஉந கிடைக்கிறது. பறவைகள் விடுகதை..!! 1. டக்டக் டக்டக் டக்கென்றே தட்டும் ஒலியும் கேட்கிறதா, எட்டிப் பார்த்தால் மரத்தினிலே இருப்பேன் பூச்சி பிடிப்பதற்கே, கொட்டும் அலகோ உளிபோலே கூராய் வலிமை மிக்கதுவே - அது என்ன?  மரங்கொத்தி 2. வெண்மை நிறத்தில் வயிறிருக்கும் மேலே கறுப்பு நிறமிருக்கும், வண்ணம் இரண்டும் சேர்ந்தொன்றாய் வடிவைக் கூட்டும் மிக நன்றாய், கொண்டேன் நுனிவால் கவைபோலே - அது என்ன?  வெள்ளை வயிறு கரிச்சான் 3. மணமாம் மலரின் பெயரதனை வடிவாம் புள்ளும் பெற்றதுவே, கண்கள் சிவப்பு நிறமிருக்கும் கருத்த உடலே கொண்டிருக்கும், வண்ணச் சிவப்பு இறகுகளாம், வாலோ சற்று நீண்டதுவாம் -அது என்ன?  செம்பகம்

Comments